பாஜக.,வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் நாளை தொடங்குகிறது பாஜக.,வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரும்காலத்தில் தேர்தலை யார் தலைமையில் எதிர்கொள்வது மற்றும் தேர்தல்வியூகங்கள் குறித்து முக்கியமுடிவுகள் எடுக்கப்படலாம் .

இதனிடையே அத்வானி இன்று கோவாவுக்கு வரவில்லை. இவர் மோடியின் மீதான அதிருப்தியில் பங்கேற்கவில்லை என்று மீடியாக்கள் பல திரித்து கூறினாலும், அவரது உடல் நிலை காரணமாகத் தான் அத்வானி பங்கேற்கவில்லை என்று கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது அத்வானி உடல்நலம் குறித்து என்னிடம் சொன்னார். நானே அவரை வரவேண்டாம் என்று கூறியிருக்கிறேன். நாளைய கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று கூறினார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் கோவாவந்த மோடிக்கு விமான நிலையத்தில் மேள, தாளங்கள் முழங்க ஆயிரகணக்கான தொண்டர்கள் வரவேற்ப்பு தந்தனர்.

Leave a Reply