இந்த இரண்டாம் பதிவில் அமெரிக்காவின் "உழவர் சந்தை" –American "Farmers' Market"–பற்றி எழுதப்போகிறேன்..இது "ஏதோ" அங்கு போனதற்காக –அதை பார்த்ததற்காக எழுதுவதாக தயவு செய்து நினைக்காதீர்கள்..

அங்கு போய் அதை பார்த்த பிறகு, அது பற்றி கேட்டறிந்து, படித்த பிறகே, எனக்கு இதில் "இவ்வளவு விஷயம்" இருக்கிறதா? என நினைத்தததே— இப்பதிவை எழுத தூண்டியது..

அமெரிக்கர்கள் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் நமது நாட்டில் செய்தால்–" நம் விவசாயிகள் வாழ்வு வளமுறுமே.."–என்கிற ஆதங்கத்தில் எழுதியது..

முதலில் அங்கு அதன் பெயரே "ஃபார்மர்ஸ் மார்க்கட்" உழவர் சந்தைதான்.. ஒரு பெரிய கல்யாண மண்டப சைஸ் ஷெட்டில் , அழகாக, காய் கறிகள், பழங்கள், கீரை வகைகள், பயிறு வகைகள், மற்றும் விவசாய தயாரிப்புக்கள், ஊறுகாய், தேன், ஜாம், சிரப்புக்கள், அடுக்கி வைத்திருக்கிறார்கள்..

கட்டடத்திற்கு ஏசி இல்லை .பெரிய "எக்ஸ்சாஸ்டர்கள்" உள்ள காற்றோட்டமான இடமாக உள்ளது..

நம்மூர் போல தனிதனி கடையோ அல்லது ரோட்டில் "குவித்து" வைத்திருப்பதோ இல்லை..ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல உள்ளது..தள்ளுவண்டிகள், கவூண்டரில் வரிசையாக நின்று பணம் ( கிரெடிட் கார்ட்)செலுத்துகிறார்கள்..

எனக்கு ஆச்சரியமான விஷயம் –பீன்ஸ் தவிர அங்குள்ள எந்த காயும் நம்மூர சைசில் இல்லை….

உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி, வெங்காயம், தக்காளி, எல்லாமே..ஒரு பெரிய தேங்காய் சைசில் இருக்கிறது..

பெரிதாக இருக்கவேண்டிய, பூசணி, பரங்கி, சொரைக்காய், எல்லாம் "சுண்டெலி" சைசில் இருந்தது..

குடமிளகாய் கலர் கலராக இருந்தது..இதை நான் எங்கள் ஊர் கோவை பழமுதிர் நிலையத்தில் பார்த்திருக்கிறேன்..

ஒரு கிளையில் 5,6 குண்டு குண்டு தக்காளிகள், கொடியோடு வெட்டி வைத்திருந்தனர்…

சோளக்கதிர், வெள்ளரி பிஞ்சு சைசிலும், வெள்ளரி பிஞ்சு, சொரைக்காய் சைசிலும் இருந்தது..பயிறு, மொச்சை அவரை வகைகள் — பலப்பல கலர்களில், பலபல பெயர்களில், பாக்கட் பாக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..இவைதான் என்னை ஆச்சரியப்படுத்தியது..

பெரிய பெரிய மால்களின் விலையில் –பாதிவிலைக்கு இங்கு காய்கறிகள் கிடைப்பதாக என்னோடுவந்தவர்கள் சொன்னார்கள்..இருந்தாலும், கூட்டம் "வெறிச்சொடிதான்" இருந்தது..

இவ்வளவு சொன்னீர்களே ஏதாவது புதுமையை சொல்லுவீர்கள் என இதுவரை படித்து விட்டோம்..என நீங்கள் முணுமுணுப்பது என்காதில் விழுகிறது..சொல்கிறேன் கேளூங்கள்—-

1..ஆசிய கண்டத்திற்கு சமமான மிகப்பெரிய சைசில் இருக்கும் அமெரிக்கா என்கிற நாடு கடந்த 19 வருடமாக கஷ்ட்டபட்டு விவசாயிகளுக்க்கு நன்மை செய்ய இதுவரை 8144 உழவர் சந்தைகளை மட்டுமே திறந்திருக்கிறது..

2.இவை லாப நோக்கின்றி விவசாயத்தை ஊக்குவிக்க அமெரிக்க விவசாய இலாக்காவின் முயற்சியில் தொடங்கபட்ட விவசாயிகளுக்கான "உதவும் கரம்"

3.இதற்காக "Agricultural Marketing Services" என்ற அமைப்பை அரசு உருவாக்கியுள்ளது..

4..அதிகமான விவசாயிகளை இந்த நெட்வொர்க்குள் கொண்டுவர குஜராத்தில் மோடி அரசு செய்தது போல பல்வேறு "மேளாக்களை " அமெரிக்க அரசும் நடத்தி வருகிறது..

தமிழ்நாட்டில் கருணாநிதி கொண்டுவந்த "உழவர் சந்தை " திட்டத்தை அம்மா கிடப்பில் போட்டார்..தமிழ்நாட்டில் மட்டும் 600 க்கும் அதிகமான நகரங்கள் உள்ளன–சுற்றியுள்ள கிராமங்களில் பயிர் செய்யப்படுவதை விற்க இங்கு உழவர் சந்தை இருந்தால் விவ சாயிகளின் வாழ்வு வளமுறும்..

இதேபோல் நாடு முழுக்க 29 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உழவர்சந்தை தொடங்கப்பட்டால், இந்திய விவசாயிகள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி கிடைக்கும்..

இதை நம் மோடிஜி அரசுக்கு செய்தியாக நாம் சொல்வொமா?

இதை படிக்கும் நல்ல உள்ளத்தில் ஒன்று இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சரின் "வெப்சைட்டுக்கு" அனுப்புவோமா?..

 

—-தொடரும்..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply