2ஜி ஊழலில் கூட்டணி கட்சியான திமுகவையே முழு பொறுப்பாக்கும் சதிவேலையில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது என்று பாரதிய ஜனதா குற்றம்சுமத்தியுள்ளது .

இது தொடர்பாக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் ஜெகத் பிரகாஷ் நட்டா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு ஊழலானது பிரதமர், சோனியா

காந்தி ஆகியோரின் ஆதரவுடன்தான் நடந்துள்ளது . இருப்பினும் இதில் திமுகவையே முழுப்பொறுப்பாக்குவது என்ற சதிவேலையில் மறைமுகமாக ஈடுபட்டுவருகிறது காங்கிரஸ்.

அதேநேரத்தில், தாங்கள் திமுகவை தனிமைப்படுத்தவில்லை,திமுகவோடு இணைந்திருக்கிறோம் என்றதொரு தோற்றத்தை மக்கள்மத்தியில் உருவாக்கி-வருகிறது அலைகற்றை.ஊழலில் திமுகவும், காங்கிரஸம் கைகோத்தே செயல்பட்டன. முன்கூட்டியே நன்கு-திட்டமிட்டு இரண்டு கட்சிகளும் செயல்படுத்தியுள்ளன.இந்த நிலையில் திமுகவை-மட்டுமே இதில் பலிகடாவாக்கி, தங்களை நியாயவான் போன்று காட்ட காங்கிரஸ் சதி செய்கிறது என்று தெரிவித்தார் .

Leave a Reply