பிரதமர் நரேந்திரமோடி 16, 17–ம் தேதிகளில் 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்குசெல்ல உள்ளார்.

இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட போதும் சனிக் கிழமைதான் வெளியில் தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்துக்கான அறிவிப்பு மிகக்குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் இருநாட்டு அதிகாரிகளும் மோடி பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவருகிறார்கள்.

மிக குறுகிய கால அவகாசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதுதான் இருநாட்டு அதிகாரிகளுக்கும் கடும் சவாலாக மாறியுள்ளது.

பிரதமர் மோடி இந்த 2 நாள் சுற்றுப்பயணத்தின் போது அபுதாபி, துபாய் செல்ல உள்ளார். அப்போது அவர் அபுதாபி இளவரசர் ஷேக்முகம்மது பின் சயீது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக்முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோரை சந்தித்து பேசுவார்.

பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுடன் வணிபம், முதலீடு, அணுசக்தி ஆகியதுறைகளில் முக்கிய ஒப்பந்தம் செய்வார் என்று தெரிகிறது. தீவிர வாதத்தை ஒழிப்பது தொடர்பாகவும் இந்திய – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிடைய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

Leave a Reply