மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்று ஓராண்டுகாலம் நிறைவடைவதை யொட்டி, அரசின் சாதனைகள், கொள்கைகளை விளக்கி நாடுமுழுவதும் 60 நகரங்களில் ஒருமாத கண்காட்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தில்லியில் மத்திய விளம்பரத்துறை இயக்ககம் சார்பில் இக்கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இக்கண் காட்சியை மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தில்லியைத் தொடர்ந்து, அனைத்து மாநிலத் தலை நகரங்களிலும் செவ்வாய்க் கிழமை முதல் (மே 26) இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப் படவுள்ளது. அதன் பிறகு, நாடுமுழுவதும் மேலும் 30 இடங்களில் அடுத்த மாதம் இறுதிவரை கண்காட்சி நடைபெறுகிறது.

இதுபோல், மொத்தம் 60 நகரங்களில் கண்காட்சி நடத்தப்படும். அந்தந்த பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலேயே iஇந்த கண்காட்சிகள் நடத்தப்படும்.

இதுதவிர்த்து, நாடுமுழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 345 வாகனங்கள் மூலமாகவும் கண்காட்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜேட்லி தெரிவித்தார். நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் ராஜ்ய வர்த்தன் ரத்தோர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பிமர்ஜுல்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:

Leave a Reply