மறைந்த சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார்.

லீ குவான் யூவின் இறுதிச் சடங்குகள், 29ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி, சிங்கப்பூருக்கு சென்று, இறுதிச் சடங்கில் நேரில் கலந்துகொள்கிறார். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி ஏற்கனவே இரங்கல்செய்தியும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply