சென்னையில், பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்கவேண்டும் உள்ளிட்ட19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

ஜூலை 7ஆம் தேதி டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்பு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்ட பத்தில் நடைபெறும் கைத்தறி தின விழாவில் மோடி பங்கேற்றார். இதனையடுத்து, மதியம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். முதலமைச்சர் ஜெயலலிதா, மோடியை அன்புடன் வரவேற்றார்.

அப்போது, பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்க வேண்டும் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்.

Leave a Reply