நிலங்கள் கையகப்படுத்துதல் தொடர்பான புதியசட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 2014 ஜனவரி 1ம் தேதியில் இருந்து இது நடைமுறையில் உள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, போதிய இழப்பீடு வழங்குதல், மாற்று இடம் அளிப்பது குறித்து பல்வேறு புதியப் பிரிவுகள்

சேர்க்கப்பட்டன. மேலும் இந்த சட்டத்தைத் தொடர்ந்து, இதுதொடர்புடைய பல்வேறு வகையான சட்டங்களிலும் திருத்தம் கொண்டுவர வேண்டும். குறிப்பாக தேசிய நெடுஞ் சாலை சட்டம், நிலக்கரி சுரங்க நில கையகப் படுத்தும் சட்டம் உள்பட 13 வகையான மத்திய சட்டங்களில் ஓர் ஆண்டுக்குள் திருத்தம்செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த சட்டங்களில் இது வரை திருத்தம் செய்யப்பட வில்லை.

இந்த சட்ட பிரிவுகளால் திட்டம் தொடங்க கால தாமதம் ஏற்படுவதுடன், நிலத்தை அளிப்பவர்களுக்கு முறையான இழப்பீடு கிடைப்பதும் கால தாமதமாகின்றன. இதை தவிர்க்க, இந்த குறிப்பிட்ட 13 மத்திய சட்டங்களில் திருத்தம்செய்ய வேண்டும் என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுகிறது. இதன் மூலம் நிலத்தை அளிக்கும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும். திட்டமும் உடனடியாகத் தொடங்க வாய்ப்புகிடைக்கும். இதை தவிர நிலம் கையகப்படுத்தும்போது நிலத்தை அளிப்போரில் 70 சதவீதத்தினரின் ஒப்புதல்கடிதம் பெறப்பட வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் சமூகபாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். இவற்றாலும் திட்டங்கள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை அல்லது இருநகரங்களை இணைத்து அமைக்கப்படும் தொழிற்நகரங்கள், பொதுத் துறை – தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டம் (இதன்படி நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்), மின்சாரம் உள்ளிட்ட ஊரக கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்புத்துறை திட்டங்கள், குறைந்த விலையிலான ஏழைகளுக்கான வீட்டு திட்டங்கள் ஆகிய 5 குறிப்பிட்ட திட்டங்களுக்கு இந்தவிதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் நிலுவையில் உள்ள, அனுமதிக்காக காத்திருக்கும் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் விரைந்து செயல் படுத்த வழிவகை கிடைக்கும். இந்த பிரிவுகள் நீக்கப்படும் அதே நேரத்தில், நிலத்தை அளிப்போருக்கான இழப்பீடுதொகை நிர்ணயம் செய்வது ஆகியவற்றில் எந்த மாறுதலும் இல்லை.

இந்த சட்டத் திருத்தங்கள் கொண்ட அவசர சட்டம் மூலம் நாட்டின் பொருளா தாரத்தை முன்னேற்றக் கூடிய பல்வேறு திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த முடியும். அதே போல் நிலத்தை அளிப்போருக்கும் விரைவாக நிவாரணம் கிடைக்கும். பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப் படுத்துவதில் உள்ள சிரமங்கள், தடைகள் குறித்து பல்வேறு மாநிலங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இந்ததிருத்தங்கள் செய்யப்படுகின்றன.

அவசர சட்டத்தில் உள்ளவை

* நிலம் கையகப்படுத்தும் போது, நிலத்தை அளிப்போரில் 70 சதவீதத்தினர் ஒப்புதல் இருக்கவேண்டும். தனியார் திட்டங்களுக்கு இது 80 சதவீதமாகும். குறிப்பிட்ட 5 பிரிவு திட்டங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

* அதேபோல் சமூக பாதுகாப்பு குறித்த ஆய்வுசெய்வதில் இருந்தும் இந்த பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

* திட்டங்களுக்கு நிலம் விரைவாக கிடைக்கும். நிலத்தை அளிப்போருக்கும் விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

* நாடுமுழுவதும் நிலுவையில் உள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் –

Leave a Reply