20 மணிநேரம் ஆனபின்னும் கொலையாளிகள் இனம் காணப்படாதது கண்டனத்துக்குரியது  ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டு 20 மணிநேரம் ஆனபின்னும் கொலையாளிகள் இனம் காணப்படவில்லை, அதற்கு முதல்வர் சிறப்புகவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று சேலம்வந்த அவர், பாஜக மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உடலுக்கு இறுதிமரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய போது,

ரமேஷைக் கொன்ற குற்றவாளிகள் யாரும் இதுவரை கைதுசெய்யப் படவில்லை. இதுவரை இந்து இயக்கத்தவர்கள் கொலைசெய்யப்பட்டதில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் மெத்தனமாக இருந்ததுபோல், ரமேஷ் கொலையையும் அப்படியே விட்டு விடாமல் போலீஸார் குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும்.

இதில், முதல்வர் தலையிட்டு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். 20 மணிநேரம் ஆன பின்பும் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்பது கண்டனத்துக் குரியது என்றார்.

Leave a Reply