ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: கிராமப்புறங்களுக்கு மின்வசதி செய்து கொடுக்கும் பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. செங்கோட்டையில் கடந்த ஆண்டு உரையாற்றும் போது, வரும் 1,000 நாட்களில் மின் வசதி இல்லாமல் இருக்கும் 18,452 கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்படும் என அறிவித்தேன். ஆனால், ‘டீம் இந்தியா’ நடவடிக்கையின் மூலம் வெறும் 6 மாதத்திலேயே (சுமார் 200 நாட்கள்), 5,279 கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கபட்டுள்ளது.

பீகார், உ.பி. அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநில மின் துறை அமைச்சகங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அவை கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுத்து, அத்தகவலை உடனுக்குடன் மத்திய மின் துறை அமைச்சகத்துக்கும் தெரிவித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply