நரேந்திர மோடி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சுமார் 20,000 முஸ்லிம்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக பாஜக தில்லிபிரதேச சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் அதிஃப்ரஷீத் தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுநரான ராதேஷியாம் தினசரி தில்லியில் ரூ. 400 சம்பாதித்துவருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தில்லிவந்த அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினசரிசம்பாதித்து குடும்பத்தை நடத்தவேண்டிய சூழ்நிலை இருந்தபோதிலும், ஞாயிற்றுக் கிழமை தில்லியில் நடைபெற்ற மோடியின் கூட்டத்தில் பலரை பங்கேற்க செய்வதற்காக அவரது ஆட்டோவை இலவசமாக இயக்கியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மோடி மாற்றத்தை கொண்டுவருவார். காங்கிரஸ் எங்களுக்காக எதையும்செய்யவில்லை. மோடி பங்கேற்கும் கூட்டத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டியுள்ளேன். இதன்மூலம் சுமார் 200 பேரை எனது ஆட்டோவில் இலவசமாக பொதுக்கூட்டத்துக்கு அழைத்துச்சென்றேன். பொதுத்தேர்தலின்போது ஒருமாதத்துக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டுவேன்’ என்றார்.

இந்தர் லோக் பகுதியைச்சேர்ந்த ஆயிஷாகாடூன், மோடியைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே நீண்ட தொலைவு பயண செய்து ஜப்பானிஸ் திடலுக்கு வந்ததாகக் கூறினார்.

அவர் கூறுகையில், ” நான் நரேந்திரமோடியை பார்க்க போவதாக என் கணவரிடம் சொன்னேன். வீட்டில் குழந்தைகளை அவர் பார்த்துக்கொண்டதால் நான் கூட்டத்துக்கு வந்தேன். கடந்த 15 ஆண்டுகளில் நான் நீண்டதொலைவு பயணம் செய்திருப்பது இப்போது தான்’ என்றார். இப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் இளைஞர் அப்துல்சாதிக் கூறுகையில், “நரேந்திரமோடி வளர்ச்சியை முன்னெடுத்து செல்பவராக உள்ளார். பா.ஜ.க தலைவர் நிதின்கட்கரி இந்த கூட்டத்தில் பேசும்போது “பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியல்ல; மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரானகட்சி’ என கூறினார். அப்போது கூடியிருந்த கூட்டத்தினர் வரவேற்றுகரகோஷம் எழுப்பினர்’ என்றார்.

Leave a Reply