இஸ்ரேல் எப்படிப்பட்ட ஒரு நாடு அமெரிக்காவையே வேவு பார்க்கும் நாடு சுற்றிலும் அரபு நாடுகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நிகழும் உலக வரலாற்றில் மிகவும் அறிவும் திறமையும் ஒன்று சேர்ந்த இனம். உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் நடக்கப் போவதாக இருந்தாலும் இஸ்ரேலின் உளவுத்துறை மொசாட்டிற்கு தான் முதலில் தெரியும்

இரட்டை கோபுர தாக்குதலை முன் கூட்டியே சொன்னவர்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி எச்சரிக்கை தகவல் அளித்தவர்கள். உடம்பெல்லாம் மூளையான மனிதர்களை கொண்ட தேசம். சுற்றி நின்று வாலாட்டிய எட்டு அரபு நாடுகளை ரவுண்டு கட்டிய நாடு. தேசபக்தி ஒன்றே தான் அவர்கள் தாரக மந்திரம்.

மியூனிச் ஒலிம்பிக்கில் தனது விளையாட்டு வீரர்களை கொன்ற பாலஸ்தீனியர்களை உலகமெங்கும் தேடி தேடி கொன்ற சாகசம். என்டபி விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட தனது மக்களை அதிரடியாக மீட்டது. எவ்வளவோ சொல்லலாம். 2008 மும்பை தாக்குதலில் யூதர் விடுதியில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக பழி வாங்க துடித்தது

உடனடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்க தயாரானது இஸ்ரேல். அப்போது இருந்த பிரதமரும் சோனியாவும் அனுமதி மறுத்து விட்டனர். அனுமதி அளித்திருந்தால் இன்று எல்லை தாண்டிய தீவிரவாதம் என்ற வார்த்தையே இல்லாமல் போயிருக்கும். ஆனால் இப்போது இருக்கும் பிரதமர் மோடி அதிரடி ஆளாயிற்றே துணிந்து விட்டார்

இந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டால் பாகிஸ்தான் சீனா மியாவ் தான். இரண்டுமே ரத்தத்தில் முளைத்த தேசங்கள். அதுவும் நடக்கத் தான் போகிறது

ஒரு புதிய விடியல் ஒரு புதிய அத்யாயம் ஒரு புதிய பாரதம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.