சொட்டு நீர்ப் பாசனம் என்பதைக் கண்டுபிடித்தது இஸ்ரேல். தண்ணீர் சுத்திகரிப்பு, மறுசுழற்சி செய்யும் மிகப்பெரிய ஆலை இஸ்ரேலில் உள்ள சோரெக்கில் உள்ளது. கிட்டத்தட்ட 60% மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் இஸ்ரேலில் பயன்படுத்தப் படுகிறது.

இந்த ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் தொழில் நுட்பத்தில் 1950களில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்கள் இஸ்ரேலின் சிட்னி லோயப் மற்றும் இந்தியர் சௌரிராஜன். இன்று பயன்படுத்தப் படுவது பெரும்பாலும் ஜான் கேடோட் 1970 களில் முன் வைத்த தொழில் நுட்பம்.

இதைவிட நமக்கு முக்கியத் தேவை அறுவடை செய்யப்பட்ட பொருள்களின் பாதுகாப்பு. இதில் இஸ்ரேலின் தொழில் நுட்பம் மிக சிக்கனமானது, பாதுகாப்பானது. ஆப்பிரிக்காவில் இதைப் பயன்படுத்தாத நாடுகளே கிடையாது. ( பாகிஸ்தானும் இதைப் பயன் படுத்துகிறது. தென் ஆப்பிரிக்க கம்பெனிகளை முன்வைத்து 🙂 )

சிறு விவசாயிக்கு அரசு இதற்கான அனைத்து உதவிகளையும் செய்தால் சேமிப்பில் இழப்பு குறையும். இதற்கான பயிற்சியை இஸ்ரேல் இலவசமாகத் தருகிறது. (போக்குவரத்து நம் செலவு).

ஏழை நாடுகளுக்கு அங்கேயே சென்று பயிற்சி அளிக்கிறார்கள். மற்றொன்று இயற்கை சார்ந்த எதிர்வினை பாதுகாப்பு முறை. (எ-டு). எலிகளை ஒழிக்க ஆந்தை வளர்த்தல். பருத்திச் செடிக்கு வரும் புழுக்களை உண்ணும் வண்டுகள் போன்றவை. ஆயுதம் தேவைதான். ஆனால் அதைவிட விவசாயத்திற்கு இஸ்ரேலின் துணை அதிகம் தேவை.

One response to “விவசாயத்திற்கு இஸ்ரேலின் துணை அதிகம் தேவை”

  1. Anonymous says:

    super

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.