சீனாவில் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு செய்வதற்கு சீன அரசு எடுத்த முயற்சிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. லுயோ யோன்குவான் எனும், கட்டிட தொழிலாளரின் மனைவிக்கு 9 வயதில் ஓர் மகள் இருப்பதால்,

சீன கொள்கைப்படி அவர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்மணி, இனந்தெரியாத நபர்களினால் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு செல்லப்பட்டு ஓர் இடத்தில் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார். பின்பு குடும்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் ஓர் தனியார் மருத்துவமனிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு செல்லப்பட்டு அங்கு போதை மருந்து செலுத்தி சிசுவை அழித்துள்ளனர். வலுக்கட்டாய கருக்கலைப்பு அராஜகத்தை தனது வலைப்பதிவில் புகைப்படங்களாக

பதிவிட்டார் லுவோ. சீனாவில் முப்பது வருடங்களுக்கு மேலா நிலவும் ஒரு குழந்தை சட்டத்தால், பெரும்பாலான பெற்றோருக்கு இதே கதி தான் என கவலைப்படுகிறார் லுவோ..

Tags:

Leave a Reply