பீகார் வளர்ச்சிக்குறித்து ராகுல்காந்தி குறை சொல்கிறார். அவருக்கு நான் சிறிய ஆலோசனை சொல்கிறேன். பிரதமராக வேண்டும் என விரும்புகிரர் . முதலில் அவர் முதல்மந்திரி ஆகி எப்படி அரசை நடத்துவது என தெரிந்துக்கொள்ளட்டும். அதன் பிறகு அவர் பிரதமர் ஆகலாம்.

பீகார் மாநில வளர்ச்சிப்பற்றி எங்கள் மீது அவர் அதிகமாக குற்றஞ்சாட்டுகிறார்.ஆனால் அவருடைய கருத்துகளுக்கு மதிப்பளிக்க விரும்பவில்ல, ஊழல்களுக்கு எல்லாம் தாயாக காங்கிரஸ் செயல்படுகிறது. போபர்ஸ் ஊழல்-தொடங்கி, காமன்வெல்த் ஊழல், மும்பை கார்கில்-வீட்டு ஊழல் என அத்தனையிலும் சிக்கி தவிக்கிறது. பீகாரில் அவர்களது (காங்கிரஸ்) 40 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தான் மக்கள் வேலை-தேடி வெளி மாநிலங்களுக்கு சென்றனர் என பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமார் குறிப்பிட்டார் ,

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி முதல்மந்திரி நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply