முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்வின் புகழை சந்திரபாபுநாயுடு கெடுத்து விட்டதாக அவரது 2வது மனைவி லட்சுமிபார்வதி குற்ரம் சுமத்தியுள்ளார்,

ஜெகன்மோகன் ரெட்டி சார்பாக விஜயநகரத்தில் கூட்டம் நடைபெற்றது, அதில் லட்சுமிபார்வதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது

 

சந்திரபாபு நாயுடு என்.டி. ராமராவ் உயிருடன் இருந்தபோதே அவருக்கு துரோகம் செய்தவர். தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு-வாங்கி முதல்வரானவர் அவரது ஆட்சி காலத்தின் போது என்.டி. ராமராவுக்கு ஒரு சிலை கூட வைக்கவில்லை. என்.டி.ராம ராவ்வின் பெயர் வெளியில்தெரியாத வாறு புகழை கெடுத்து விட்டார் என்று கடுமையாக தாக்கி பேசினார்

லட்சுமிபார்வதி தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply