அமெரிக்காவிற்கு கடந்த 19-ந் தேதி ரகசிய பயணம் மேற்கொண்டார் மகிந்த ராஜபக்சே. இலங்கையின் ஐக்கிய தேசியகட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே உள்பட சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும்,’’””இந்த நாட்டின் அரசு அதிபர் அமெரிக்காவிற்கு சென்று ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. ஆனால் எதற்காக இந்த பயணம் என்பது பற்றி தெளிவுபடுத்தாமல் மௌனம் கடைப்பிடிக்கிறது அரசு. இந்த ரகசிய பயணத்தின் நோக்கம் என்ன?”’என்று கேள்விகளை அடுக்கிய போதும்

இதுவரை ராஜபக்சேவின் ரகசிய பயணத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை ராஜபக்சே சகோதரர்கள்.

இந்நிலையில், ராஜபக்சேவின் ரகசிய பயணம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது,’””அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள எம்.டி.ஆண்டர்சன் புற்றுநோய் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார் ராஜபக்சே. டெக்ஸாஸ் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்த இந்த மருத்துவமனை, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியிலும் அதனை குணப்படுத்துகிற முறையிலும் சர்வதேச புகழ் பெற்றது. ராஜபக்சேவை கேன்சர் தாக்கியிருப்பதால் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளவே அவர் இந்த ரகசியப்பயணம் மேற்கொண்டார்”’என்கிறார்கள்.

“”கடுமையான வயிற்று வலியால் கடந்த 3 மாதங்களாகவே அவதிப்பட்டு வந்தார் ராஜபக்சே. அவரது குடும்ப மருத்துவர்கள் சீரியசான சிகிச்சை அளித்ததில் வலி நீங்கியதால் அவர் இதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அதேசமயம் வயிறு தொடர்பான அனைத்து டெஸ்டுகளும் எடுத்துப் பார்த்தபோதுதான் அவரது வயிற்றுப் பகுதியில் புற்று நோய்த் தாக்கியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். நோயின் தன்மை குறையாததால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல வலியுறுத்தினர்”’என்கிறார்கள் ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியினர்.

ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வரும் நிலையிலும், போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. குழு விசாரித்து வரும் நிலையிலும் அமெரிக்காவிற்கு ராஜபக்சே போகிறார் என்றால் அவரைத் தாக்கியுள்ள நோயின் தீவிரம் கருதிதான் என்கிற தகவல்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் எதிரொலிக்கிறது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி ராஜபக்சே அமெரிக்காவிற்கு செல்ல, ஜோதிடர்களின் ஆலோசனையின்படி… 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி தனது கணவர் குணமடைந்து சீக்கிரம் இலங்கைக்கு திரும்ப வேண்டுமென்று கடவுள்களிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார் மகிந்தாவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே.

Tags:

Leave a Reply