திமுக அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறியமட்டைதான். திமுக குடும்பஆட்சி என்றால், அதிமுக மன்னார்குடி-ஆட்சி. என்று பாஜக தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார் .

செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாகும் . 1967க்கு முன்பு அரசியல்கட்சி

தலைவர்கள் தங்களது கொள்கை மற்றும் செயல்பாடுகளை கூறி வாக்குச்சேகரித்த நிலை இருந்தது. 67க்குப் பிறகு கூட்டணி முறை வந்தபிறகு, தான்-சார்ந்த கூட்டணியின் ஒற்றுமை, உறுதிப்பாடு-குறித்தும், எதிர்கட்சிகளை விமர்சித்தும் வாக்குச்சேகரித்த நிலை இருந்தது,

இப்போது கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுக்குள் கட்சி ரீதியான போட்டி உருவாகி இருக்கிறது . தொண்டர்களிடம் ஒற்றுமை இல்லை . தலைவர்களுக்குள் ஒற்றுமை உள்ளதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது . கூட்டணி என்பதைவிட தொகுதி உடன்பாடுதான் தேர்தலாக மாறியுள்ளது.

இதனால் சிதறும் கணிசமான வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்கும். தமிழகத்தில் 10-க்கும் மேலான இடங்களில் பாஜக வெற்றி பெறும். பெரும்பாலான தொகுதிகளில் பிரதான கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக பாஜக திகழும் என்றார்,

.திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் . தி,மு,க குடும்பஆட்சி என்றால், அதிமுக மன்னார்குடி ஆட்சி. இந்த தேர்தல் திமுகவிற்கு வாழ்வாசாவா என உள்ளது. தோல்வியுற்றால் மீண்டும் வர இயலாது . இதே நிலைதான் அதிமுக,விற்க்கும் விஜயகாந்த் தனதுதொண்டர்கள் ஓடிவிடுவார்களோ என்று பயந்துதான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்று இல.கணேசன் தெரிவித்தார்

Leave a Reply