பா ஜ க வால் மட்டுமே ஊழலற்ற சிறந்தநிர்வாகத்தை தர இயலும் என்று , நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார் .

சென்னையில் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர்களுக்கு நடிகை ஹேமமாலினி ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது ,

50ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டில் எந்த வளர்ச்சி பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மத்தியில்

5ஆண்டுகள் பாரதீய ஜனதா ஆட்சியில் நாட்டுக்கு தேவையான வளர்ச்சி-திட்டங்களை வாஜ்பாய் நிறைவேற்றினார்.

நாடு பொருளாதாரத்தில் முன்னேறியது. உலக அளவில் இந்தியாவுக்கு கவுரவம் கிடைத்தது. மிக சிறந்த நிர்வாகத்தை பாரதீய ஜனதா வழங்கியது.

இப்போதும் பாரதீய ஜனதா ஆளும்-மாநிலங்களில் மிக பெரிய வளர்ச்சி-ஏற்பட்டுள்ளது.
பா ஜ க, வால் மட்டுமே ஊழலற்ற சிறந்தநிர்வாகத்தை தர முடியும் என்றார்.

Leave a Reply