ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கபட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்மிருக்கும் அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே. மகாராஷ்டிராவில் “ராலேகான் சிந்தி’ என்ற கிராமத்தில் வியத்தகு சாதனையை செய்துகாட்டியவர் .

நமதுநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஊழலைப்புரிந்தவர்கள் காங்கிரஸ் கூட்டணியினர் என்பது வெட்ட -வெளிச்சமான உண்மை!

“லோக்பால்’ என்ற ஊழல் விசாரணை அமைப்பை உருவாக்கிய தருணத்தில், இந்த லோக்பால் விசாரணைவரம்பிற்குள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சேர்க்க வேண்டும் என பிரதமராக இருந்த வாஜ்பாயும், குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் வலியுறுத்தினார்கள்.

இதனைக்கண்டு அஞ்சிய காங்கிரஸ் மற்றும் சில-கட்சிகள் இந்த மசோதாவை நிறைவேற்ற வெளிப்படையான ஆதரவைத்தெரிவிக்காமல் இழுத்தடித்தன.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆகாஷ் வீட்டு வசதி ஊழல் என்று அடுக்கடுக்கான ஊழல்கள் வெளிவந்ததுடன், இதனை விசாரிக்கும் எந்தவிசாரணை அதிகாரத்திற்க்குள்ளும் பிரதமர் வரமாட்டார் என்ற நிலையும், அரசியல்வாதிகளை தண்டிக்க இயலாது என்ற நிலையும் இருப்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
நாட்டின் ஊழலை ஒழிக்கவும், ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படவும் லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இந்த லோக்பால் வரம்பிற்குள் ஜனாதிபதி, பிரதமர், உட்பட அனைவரும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்றஉண்ணாவிரதத்தை துவக்கி இன்று 4நாட்கள் ஆகிறது.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு பின்பு ஒருபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்கியுள்ள தலைவர் அண்ணா ஹசாரே. நாடுமுழுவதும் அவரது கருத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், தேசபக்தர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லா தரப்பிலும் ஆதரவு பெருகிவருகிறது.

இந்து முன்னணி சார்பாக திருப்பூரில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது .அண்ணா ஹசாரேவின் கோரிக்கையை இழுத்தடிக்காமல் உடனடியாக மத்தியஅரசு ஏற்க வேண்டும். இந்த உண்ணாவிரதத்தினால் அவரது உடல்நிலை மோசமாகிவிட கூடாது, அவரது சேவை நாட்டிற்கு தேவை! ஊழல் அரசியல்வாதியையும் தண்டிக்கும் வகையில் உடனே கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். அதுவரை இந்த தர்ம யுத்தம் ஓயாது என ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply