நாடு முழுவதும் உருவான அபார ஆதரவைக் கண்டு மத்திய அரசு அன்னா ஹசாரேயின் நியாயமான, அர்த்தமுள்ள கோரிக்கைக்கு தானாக பணிந்தது. அவரது அனைத்து கோரிக்கையையும் ஏற்று புதிய அறிவிப்பு வெளியிட்டதையடுத்து 5நாள் தொடர்ந்திருந்த சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் அன்னா ஹசாரே. லோக்பால் மசோதாவை பற்றி பெரும் விழிப்புணர்வை உருவாக்கி மக்கள் மத்தியில் நீங்காத உயர்ந்தஇடத்தை பிடித்தார் ஹசாரே.

இந்த போராட்டம் நம்மக்களுக்கானது என்றும் இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை., இது ஒரு தொடக்கம்தான் , இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் , மக்களினுடைய ஒருமித்த ஆதரவு மற்றும் தியாகத்திற்கு கிடைத்தவெற்றி என இன்றைய-போராட்டத்தை முடித்துக்கொண்ட ஹசாரே தெரிவித்தார் . ஐந்து நாட்களில் மத்திய அரசையே ஆட்டிப்படைத்தவர் இது தனது வெற்றி அல்ல என்று பணிவாக கூறி மேலும் தனதுசெல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டார்.

முன்னதாக மத்தியஅரசின் லோக்பால் தொடர்பான அறிவிக்கை-நகல் அவரிடம் தரப்பட்டது . இதனை தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.

Tags:

Leave a Reply