19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்பான்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள, உலகத்திலேயே இதுவரை நடந்திராத, ge பிரம்மாண்டமான ஊழலான 2 G ஸ்பெக்ட்ரம்

ஊழலை (176 கோடி 17600000000000) மறைப்பதற்காகவும், பாரத வரலாற்றிலேயே ஒரு கூட்டத்தொடர் முழுவதும் நடத்த முடியாமல் முடிந்த பார்லிமெண்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் சம்பவத்தை மக்களிடம் இருந்து மறைக்கவும், கார்கில் போர் வீரர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகளை மகாராஷ்ட்ர காங்கிரஸ் அμசு, அபேஸ் செய்த ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்ட ஊழலை மறைப்பதற்காகவும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலை மறைப்பதற்காகவும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் காங்கிμஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றியுள்ளார்கள்.

உலகின் சிறந்த பாரம்பரியமான இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவுபடுத்துவதற்காகவும், பாரத நாட்டிலே தேசபக்திக்காகவே வாழ்ந்து வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி அவதூறாகவும் பேசியுள்ளது வேதனையான விஷயமாகும்.

அரசியல்வாதிகள் தங்கள் நாற்காலியைக் காப்பற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பது மக்கள் அறிந்ததுதான். இருந்தாலும் இவ்வளவு கீழ்த்தரமான முறையில் காங்கிரஸ் மாநாட்டில் பேசியிருக்கக்கூடாது. இப்போது காங்கிரஸின் தலைவராக இருப்பவர் அந்நிய நாட்டுப் பெண்மணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எல்லாமதத்தையும் ஒன்றாக நினைக்கும் இந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்?

எல்லாக் கடவுளும் ஒன்றுதான் என்று கூறும் இந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்? வசுதைவ குடும்பகம், யாதும் ஊரே யாவரும் கேளிர், சர்வே பவந்து சுகின: என்று உலகத்தையே ஒரு குடும்பமாக நினைக்கும் இந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்.

இந்து ஒரு காலத்திலும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தைப்போல் ரத்தம் சிந்தி வளர்ந்த மதமல்ல இந்துமதம்! இந்து மதத்தைப் பரப்புவதற்காக யாரும் படையெடுத்ததும் இல்லை; பிரச்சாரம் செய்ததும் இல்லை. இப்படிப்பட்ட இந்துக்களைக் காவி பயங்கரவாதிகள் என்று கூறி புனிதமான துறவிகளின் சின்னமான காவியையும் இழிவுபடுத்தியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். இவர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

மகாராஷ்ட்ர மாநிலத்தில், பயங்கரவாத தடுப்புப் பிரிவில் பணியாற்றிய ஹேமந்த் கர்கரே என்ற போலீஸ் அதிகாரியைப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொன்றது உலகறிந்த உண்மை. ஆனால் காங்கிரஸின் திக் விஜய் சிங், கர்கரே இறப்பதற்கு முன் இந்துத் தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்று எனக்கு போன் செய்தார் என்று இப்போது கூறுவது பொறுப்புள்ள மனிதனுக்கு அழகாகுமா?

ஹேமந்த் கர்கரேயின் மனைவி இதை மறுத்து எனது கணவர் படுகொலையை அμசியல் ஆக்காதீர்கள் என்று கூறுவது கவனிக்கத்தக்கது. முன்னாள் முதல்வர் இப்படிக் கூறுவது சட்டப்படி நியாயமா? நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தரும் இμண்டு செய்திகள் : 1) அமெரிக்கத் தூதரக அதிகாரி, அமெரிக்காவிற்கு அனுப்பிய செய்தியில் காங்கிரஸ், அரசியல் வெற்றிக்காக சாதி, மத உணர்வைத் தூண்ட முடிவெடுத்து காவிப் பயங்கμவாதம் என்று பேசுகிறது எனச் சொன்னது. 2) இராகுல் காந்தி அமெரிக்க அதிகாரிகளிடம் லஷ்கர்இதொய்பா, சிமி போன்ற பயங்கரவாத அமைப்புகளைப் போல இந்து பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து உள்ளது என்று கூறியது. மேலும் ஆர்.எஸ்.எஸ்., தடைசெய்யப்பட்ட சிமி போன்ற அமைப்பு என்று கூறியதாகும்.

இராகுல் காந்தி பாலுக்கும், விஷத்திற்கும் வித்தியாசம் தெரியாதவரை போல், சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக மிகக் கேவலமாக நடந்து கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்த நேரு கூட 1963ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ்.ஐப் பங்கு கொள்ளச் செய்தது இராகுலுக்குத் தெரியாதா? இந்திராகாந்தி ஆர்.எஸ்.எஸ்.ஐ ஒருபோதும் குறை கூறியதில்லை என்பது இராகுலுக்குத் தெரியாதா?

லட்சக்கணக்கான சேவைப் பணிகளை நாடு முழுவதும் செய்து வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்களை, கட்டுப்பாடு உள்ளவர்களை, நேர்மையானவர்களைக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

இந்து மதத்திற்கு இன்று ஒரு பாதுகாப்பு ஆர்.எஸ்.எஸ்.ம், அதன் சகோதர அமைப்புகளும்தான் ஆகும். சாதுக்களும், சன்னியாசிகளும், மடாதிபதிகளும், சான்றோர்களும் பாராட்டும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகளும், மாவோயிஸ்ட் களும் நம் நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தான நிலையில் இப்படியெல்லாம் பொறுப்பற்ற முறையில் பேசுவது மகாத்மா காந்தியின் பெயரில் இயங்கும் பாரம்பரியமான காங்கிரசுக்கு அழகல்ல.

பொறுப்பற்ற தேசபக்தியற்ற இந்த அரசியல்வாதிகளின் உண்மை சொரூபத்தை இந்துக்களின் ஒவ்வொரு வீட்டிற்கும், வீதி வீதியாகச் சென்று விளக்கிக் கூறி பாரத தேசத்தைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பணியில் இறங்குவோம்! வெற்றி பெறுவோம்! பாரத் மாதா கீ ஜெய்!

Leave a Reply