லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் சார்பாக இடம் பெற்றுள்ள அன்னாஹசாரே உள்ளிட்ட ஐந்து-பேரும், தங்களது சொத்து விவரங்களை இன்று வெளியிடுகின்றனர் .

ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க வழிவகுக்கும், லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், அரசுத் தரப்பில் ஐந்து-பேரும், பொதுமக்கள் தரப்பில் ஐந்து-பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் முதல் கூட்டம், டில்லியில் நாளை நடைபெறுகிறது .இந்தநிலையில், ஊழலுக்கு எதிரான அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில் , “லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்களின் பிரதிநிதிகளாக அன்னாஹசாரே, சாந்திபூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ்ஹெக்டே, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், வெளிப்படையான அணுகு முறையை மேற்கொள்ளும் வகையில், தங்களது சொத்து விவரங்களை இன்று வெளியிடவுள்ளனர்’ என்றார்.

Leave a Reply