நரேந்திரமோடியை பாராட்டியதற்காக ஊழல் எதிர்ப்பு-இயக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதலவர் நிதிஷ்குமார் போன்றோர் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களது திட்டங்கள் நன்றாக உள்ளன . எனவே மற்றமாநில முதல்வர்களும் அவர்களது

திட்டங்களை பின்பற்ற-வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்க்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் மனீஷ் திவாரி மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்

இதையடுத்து விளக்கம் தந்த ஹசாரே, நான் நரேந்திரமோடியின் வளர்ச்சி திட்டங்களையும், ஏழை-மக்களுக்காக அவர் உருவாக்கிய] திட்டங்களையும் தான் பாராட்டினேன். என்று அவர் விளக்கம் தந்துள்ளார் மேலும் அவர் தெரிவித்ததாவது என்னை விமர்சிப்பது எனக்கு வேதனையை தருகிறது . தொடர்ந்துவரும் விமர்சனங்களை பார்க்கும்போது நம்மிடம் கருத்து வேறுபாடு மற்றும் பிளவை உருவாக்கி ஊழல்எதிர்ப்பு இயக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக தோன்றுகிறது என்று தெரிவித்தார்

THAMARAI TALK ;
காந்தி தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப்போராடினார். இங்குள்ள அரசியல்கட்சிகள் தீண்டாமையை ஒழிக்கப்பாடு படுவதாகப் பீத்திக்கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள் காந்தி பிறந்தமண்ணில் அரசாளும் முதல் அமைச்சருக்கே இந்தநிலை என்றால் சாதாரணமான இந்தியக்குடிமகனின் நிலைமை என்ன ஆகும் . இந்திரா காந்தி கொல்லப்பட்ட போதுகூட காங்கிரஸ்காரர்களால் சுமார் 3000 க்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை கேஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய மதவாதிகளால் விரட்டப்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் இன்றுவரை அகதிகள் போல டில்லியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லதுசெய்யும் நல்லவர்களை பாராட்டினால் தேசத்துரோகிகளும் கொள்ளைக்காரர்களும் எதிர்ப்பு தெரிவிக்கத்தான்-செய்வார்கள். தடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து ஊழல்வாதிகளை-தண்டிக்க நீங்கள் எடுத்திருக்கும்முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம்

Tags:

Leave a Reply