பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி அறிவித்துள்ளார் .

மேற்கு வங்கத்தில் வியாழகிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியது: 2008ம் ஆண்டில் ஆட்சிக்கு-ஆதரவாக எம்பி.க்களை விலைக்கு வாங்கி லஞ்ச-ஊழலை பெரிய அளவில் துவங்கியது மன்மோகனின் அரசு. தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல்,

காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி திட்டத்தில் ஊழல் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் ஊழல்செய்து, எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு கோடிகளை சுருட்டியுள்ளது காங்கிரஸ் கூட்டணி அரசு.

அரசியல்வாதியாக இல்லாத மன்மோகன்-சிங் ஆட்சிக்கு வந்தபோது அவர் மீது நான் மிகுந்தமதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் மிக மோசமான ஆட்சியை நடத்துகிறார். இதுவரை நடைபெற்ற-ஆட்சிகளிலேயே மிக மோசமானது மன்மோகன் சிங்கின் ஆட்சிதான் என்று அத்வானி தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply