இந்திய மக்கள் தொகை மிரட்டிக்கொண்டிருக்கிறது. இப்போது 121 கோடி. பத்து ஆண்டுகளில் பெருகியிருப்பது, 18 கோடி மக்கள். தமிழ்நாட்டில் 7 கோடியைத் தாண்டி விட்டோம். இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்னவாகும்?

உலக மக்கள் தொகையில் 17.5 சதவீதம் மக்கள் இந்தியர்கள். ஆனால் உலக நிலப்பரப்பில் 2.5 சதவீதம் கூட நம்மிடம்

இல்லை. அடுத்த பத்தாண்டில் இன்னும் 18 கோடி அளவுக்கு மக்கள் தொகை அதிகரித்தால் நம் நாட்டு நலன் என்ன ஆகும்..”

– என்று கேள்வி எழுப்பும் ஹெலன், “ஒன்று பெறுவதே நன்று..”

– என்கிறார். இவரும் ஒரு குழந்தை தான் பெற்றிருக்கிறார்.

“இந்த நாட்டிற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அதில் முதல் கடமை மக்கள் தொகையை குறைப்பது. மக்கள் தொகையை குறைக்க நாம் பிரசாரம் மட்டுமே செய்யாமல், நாமே அதை கடைப்பிடிக்கவும் வேண்டும். கடைப்பிடித்தால் அதன் பலன் நமது வீட்டிலே தெரியும். எங்களுக்கு ஒரே ஒரு குழந்தை என்பதால் நாங்கள், ‘ஒரு குழந்தைக்கு மட்டுமே சம்பாதித்தால் போதும்’ என்று நிம்மதியாக இருக்கிறோம். நான் இரண்டு, மூன்று குழந்தைகளை பெற்றிருந்தால் அத்தனை குழந்தைகளுக்கும் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி வந்துவிடும். அதனால் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைப்போம். உடல் கெடும். அத்தனை குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கவேண்டிய நிலை ஏற்படும்போது உடலும், மனதும் பாதிப்படையும். அதனால் பெற்ற குழந்தைகளை பேணி வளர்க்க முடியாத சூழல் ஆகிவிடும். அது வீட்டிற்கும், நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் நான் ஒரு குழந்தையே போதும் என்கிறேன். என் தோழிகள் வட்டத்திலும் அதையே வலியுறுத்துகிறேன். என் தோழிகள் அனைவருக்கும் ஒரே குழந்தைதான்..”- என்கிறார், ஹெலன்.

ஒரே குழந்தை என்றால் படிப்பிற்காக பிரியும் போதும், உடல் நிலை சரியில்லாமல் ஆகும்போதும் தாய் ரொம்ப கலங்கவேண்டியதிருக்குமே?

“ஏன் தாய்க்கு மட்டும் கலக்கம் என்கிறீர்கள்? மகளுக்கும் தான் கலக்கம் ஏற்படும். உண்மையைச் சொன்னால் என் மகள் என்னைவிட்டு படிப்பிற்காக பிரிந்தபோதுதான் உண்மையான அன்பு என்றால் என்ன என்பதை நானும், அவளும் புரிந்தோம். என் மகள் தபிதா கோபியை நான் செயின்ட் ஜான்ஸ் உறைவிடப் பள்ளியில் சேர்த்தேன். வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே அவள் வீட்டிற்கு வர முடியும் என்பதால், பள்ளிக்கு செல்லும் முதல்நாள் அழுதாள். நானும் அழுதேன். சிறிது நேரத்தில் அவள் அழுகை நின்றது. ஆனால் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதுதான் நானும் அவள் பிரிவைத் தாங்க முடியாமல் இருக்கிறேன் என்பதை அவள் உணர்ந்தாள். ஆனாலும் படிப்பிற்காக பிரிய வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டாள். அதனால் பிரிவு தான் எங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியது. அன்பை அதிகப்படுத்தியது.

ஒரு குழந்தை என்றால், அதற்கு உடல் நிலை சரியில்லை என்றால் பயம் வந்து விடுமே என்கிறீர்கள். ஒரு தாய் பத்து குழந்தைகள் பெற்றிருந்தாலும் அதில் ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் அவள் கலங்கத்தான் செய்வாள். அதேநேரத்தில் ஒரு குழந்தை என்றால் உடனடியாக கவனிக்கவும், எவ்வளவு செலவானாலும் சரியான சிகிச்சை அளிக்கவும் அந்த பெற்றோரால் முடியும். இனியும் ஒரு சில பாதிப்புகளை மட்டுமே பெரிதாக்கி பார்த்துக்கொண்டு, பல குழந்தைகளை பெற்று நாம் கஷ்டப்படக் கூடாது. ஒரு குழந்தை என்ற கொள்கைக்கு எல்லோரும் உடன்பட வேண்டும்..”- என்கிறார்.

ஹெலன் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியவர். இவருடைய பெற்றோர்: துரை- தேவகனி. ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். அப்பாவின் தொழில் இடம் மாறியதால் இவரும் சிறுவயதிலே சென்னைக்கு வந்துவிட்டார்.

“சிறுவயதிலே நான் பெண்கள்படும் அவஸ்தையை பார்த்து வளர்ந்தேன். கணவரிடம் அடி, உதைபடும் பெண்களை என் கண் எதிரே கண்டிருக்கிறேன். அதனால் பெண்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கன்னியாஸ்திரி ஆகவேண்டும் என்று நினைத்தேன். அதையே என் கொள்கையாகக் கொண்டிருந்தேன். என் அம்மா என்னிடம், ‘குனிந்த தலை நிமிராமல் பெண் வெளியே நடந்து செல்லவேண்டும்’ என்பார். நானும் அப்படியே நடந்தேன். காதல், கல்யாணம் போன்றதெல்லாம் தப்பான விஷயங்கள் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஆனால் என் எண்ணத்திற்கு எதிராக வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கத் தொடங்கியது.

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே எனக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டார். பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் கூட வந்தார்கள். ‘நான் தொடர்ந்து படிக்கவேண்டும். படிப்பு மட்டுமே ஒரு பெண்ணை தலைநிமிர்ந்து வாழவைக்கும். கல்யாணம் எந்த பெண்ணையும் தலைநிமிர்ந்து வாழவைக்காது. எனக்கு கல்யாணம் என்றாலே என்னவென்று தெரியாது. அதை செய்துகொள்ள கட்டாயப்படுத்துகிறீர்கள். ஆனால் படிப்பை பற்றி எனக்குத் தெரியும். படிக்க அனுமதிக்க மறுக்கிறீர்களே’- என்று சொன்னேன். அம்மாவும் எனக்காக வாதிட்டார்.

அந்த காலகட்டத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2 ஆயிரம் ரூபாய்தான். அப்போது அப்பா இரண்டு கிரவுண்ட் இடம் வைத்திருந்தார். ‘ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்றால் இவளை படிக்கவைக்கலாம். இரண்டு கிரவுண்ட் நிலத்தை விற்றால் இவளுக்கு திருமணமே செய்துவைத்துவிடலாம். எதை செய்வது?’ என்று என் தந்தை யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தது.

மார்க் லிஸ்ட் வாங்குவதற்காக என் அப்பாவை அழைத்துச் சென்றேன். என் தோழிகளும் நிறைய பேர் அங்கே நின்றிருந்தார்கள். எல்லோரும் மார்க் லிஸ்ட் வாங்கியதும், தோழிகளை விட என் மார்க் அதிகமாக இருந்தது. ‘ஏய் நீ தாண்டீ நிறைய மார்க் வாங்கியிருக்கிறாய்!’ என்று தோழிகள் என்னிடம் கூறுவதை பார்த்துக்கொண்டே நின்றிருந்த அப்பாவுக்கு மனம் மாறியது.

நான் தமிழ் மீடியத்தில் படித்தேன். எனக்கு கம்ப்ïட்டர் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அப்போது கம்ப்ïட்டர் படிக்க வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. நான் என் பெற்றோருக்கு தெரியாமல் விண்ணப்பம் செய்தேன். இன்டர்விï அழைப்பு வந்தது. ‘இன்டர்விï தானே… இவள் தேறமாட்டாள்’ என்று நினைத்துக்கொண்டு என் தந்தை அழைத்துப் போனார். ஆனால் வாய்ப்பு கிடைத்து விட்டது. மீண்டும் என் தந்தை படிக்கவைக்கமாட்டேன் என்று கூற, நான் கடைசி ஆயுதமாக ‘தற்கொலை பண்ணிப்பேன்’ என்று மிரட்டி பணிய வைத்தேன்… என்கிறார்.

அதைத் தொடர்ந்து இவர் 3 வருடங்கள் தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக்கில் ‘கம்ப்ïட்டர் சயின்ஸ்’ கற்றிருக்கிறார். முதல் வகுப்பில் தேறியிருக்கிறார். பரீட்சை முடிந்த மூன்றாம் நாளிலே கம்ப்ïட்டர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்திருக்கிறது.

“வேலை பார்த்துக்கொண்டே நான் கம்ப்ïட்டர் பாடங்களை கற்றுக் கொடுக்கவும் செய்தேன். அதன் மூலம் என் திறமை வளர்ந்தது. கம்ப்ïட்டர் தொடர்புடைய சாப்ட்வேர்கள் தயார் செய்து இணைத்துக் கொடுக்கவும் ஆரம்பித்தேன். 20 வயதிலே நான் பிசியாக இருந்த நேரத்தில் மீண்டும் எனக்கு மாப்பிள்ளை தேடினார்கள். நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. அதனால் நான் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளானேன்.

அதனால் கம்ப்ïட்டர் தொழில்நுட்பத்தில் நான் ஆழ்ந்து பணியாற்றத் தொடங்கினேன். அப்போது ஒரு முறை நான் கம்ப்ïட்டர் கற்றுக்கொடுக்க சென்றபோது அந்த நிறுவனத்தில் ஜோதிடம் தொடர்புடைய வகுப்பு ஒன்று நடந்து கொண்டிருந்தது. நானும் ஆர்வத்தில் அதைக் கற்றேன். பின்பு தொடர்ந்து புதிய புதிய விஷயங்களை தேடிப்பிடித்து கற்கத் தொடங்கினேன். ரெய்கி, வசிப்பு சாஸ்திரம், ஹீப்ரு நிïமராலஜி, ஜெம்மாலஜி போன்றவைகளையும் கற்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். அதுவே என் பணியாகவும் ஆகிவிட்டது. தியானம், யோகா போன்றவைகளையும் நான் ஆழ்ந்து கற்றுக்கொண்டதால் என் மனஆற்றல் மேம்பட்டது. என்னிடம் கற்றவர்களும், ஆலோசனை பெற்றவர்களும் என்னை ஹெலன்ஜி என்று அழைக்கத் தொடங்கினார்கள்.”- என்கிறார்.

பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு உலக அனுபவங்களை பெற்றிருந்தாலும் ஏமாந்து போவதில் இப்போதும் அவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்களாமே?

“பெண்கள் மட்டும் ஏமாறுவதில்லை. ஆண்களும் ஏமாறத்தான் செய்கிறார்கள். ஆனாலும் பெண்கள் இன்னும் அதிகமான விழிப்புணர்வையும், தன்னம்பிக்கையையும் பெற்றால் ஏமாறவே மாட்டார்கள். அதற்காக நான் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஆலோசனை வழங்குகிறேன். கம்ப்ïட்டர் தொழில் நுட்ப ரீதியாகவும், நான் கற்ற கல்வி மற்றும் அனுபவங்கள் வாயிலாகவும் அந்த கவுன்சலிங்கை கொடுக்கிறேன். பெண்கள் வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படும்போது எப்படி சமாளிக்கவேண்டும் என்பது பற்றி புத்தகமும் எழுதிக்கொண்டிருக்கிறேன்..”-என்கிறார்.

இவருடைய கணவர் பெயர் கோபிராஜ். கம்ப்ïட்டர் என்ஜினீயரிங் கற்றவர். இவர்களது ஒரே மகள் தபிதா கோபி 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்

Tags:

Leave a Reply