கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு உருவான கலவரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தொடர்பு இருப்பதாக கருத்துதெரிவித்து ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இது பத்து ஆண்டுகள்-கழித்து அதுவும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இவ்வாறு செய்திகள் வெளியிடுவதும் அதைபற்றி கருத்து சொல்வதும் ஏன் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்

ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். இன்றைய நிலையில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும்தான் நாட்டின்மீதும் மக்களின் மீதும் பரிவும் பாசமும் தேசபக்தியும் உள்ளது. இந்த மக்களிடையே எப்போதும் பிரிவினையை வைத்து அவர்களை ஒன்று சேர விடாமல் அடித்துக்கொள்ள வைத்து இந்த குளிரில் எப்போதும் பதவியில் இருக்க வெள்ளைக்காரனின் தந்திரங்களை சிலர் செய்கின்றனர் வாஜ்பாய் போகும்பொழுது வைத்து-விட்டு போன நல்ல பொருளாதார நிலையை இமாலய ஊழல்களால் காங்கிரஸ் நாசம் செய்து விட்டது. இவற்றிலிருந்து தப்பிக்கவும் எப்படியாவது குஜராத் பீகார் நல்லாட்சிகளை மூடு விழ செய்யவும் மேற்கொள்ள படும் சதியாக இது இருக்கலாம்

Tags:

Leave a Reply