சத்ய சாய் பாபாவின் மரணம் குருத்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள-இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது ,

தெய்வம் மனிதனாக அவதாரம்-எடுக்கும் என கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால் நமது-வாழ்நாளில் நமது கண்முன்பு அவதாரபுருஷராக மகான் சாய்பாபா நமக்கு அருள்பாலித்து உலாவந்தார்.

தன்னை அணுகியவர்களுகும், அணுகாதவர்களுக்கும் அருள்பாவித்த பெருமை சத்ய-சாய்பாபாவையே சேரும் . தெய்வவழிபாட்டில் மட்டும் அல்லாமல் சமுதாய பணியிலும் கோடிகணக்கான பக்தர்களை ஈடுபடவைத்தார்.

சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க கிருஷ்ணநதிநீரை கொண்டுவர கோடிகணக்கில் நிதிஉதவி தந்தார் . தன்னை போற்றுவோரையும், தூற்றுவோரையும் சமமாகபாவித்த அவதார புருஷர்-சாய்பாபா.

அவரது பூலோக-வாழ்க்கையின் பூர்த்தி பக்தர்களுக்கு மிகபெரிய இழப்பாக-இருந்தாலும் அவரது அருளாசி நம்மை-வாழ்த்தும். இறைவனோடு ஐக்கியமாகிவிட்ட-சாய்பாபா என்றும் நமக்கு வழிகாட்ட-பிரார்த்திக்கிறேன்” என் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply