சத்ய சாய்பாபாவின் காப்பாளராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சத்யஜித்

சத்ய சாய் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதில் இருந்து ஏராளமான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது .

சாய் பாபா வுக்கு சரியாக உணவு தரவில்லை, நிறைய வலிநிவாரண மருந்துகளை தந்திருக்கிறார் . எனவேதான் சாய்பாபாவின் உடல்நிலை மோசமானது என்று சத்யஜித் மீது குற்றம்சாட்டபடுவதாக போலீஸ்-வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாய்அறக்கட்டளை காசோலைகளில் சத்யஜித் கையெழுத்திட்டு-வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரம நடவடிக்கைகளில் அதிக அதிகாரம் மிக்க நபராக சத்யஜித் கருதப்பட்டு வருகிறார்.

சத்யஜித்துக்கு வெளியிலும், ஆசிரமத்திலும் எதிர்ப்பாளர்கள் அதிகம் இருப்பதாக தெரிகிறது . பாபாவின் மறைவை தொடர்ந்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல்-ஏற்படுவதற்கான சாத்தியகூறு உள்ளது. அதனால் அவருக்கு போலீஸ்பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாக உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

Leave a Reply