சுவிஸ்-வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடபடும் என விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே தெரிவித்துள்ளார் .

ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது

.”சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை ரகசியமாக முதலீடு செய்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும்-கண்டேன். விரைவில் அந்தபட்டியலை வெப்சைட்டில் வெளியிடுவோம்.

கறுப்புப்பண விவகாரத்தில் இந்தியஅரசு மெத்தனமாக இருக்கிறது . ஆனால், ஜெர்மன் அரசு தீவிரம்காட்டி வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பதில் ஜெர்மன் அரசு முழு -வீச்சில் ஈடுபட்டுள்ளது. இருந்தபோதிலும் , ஜெர்மனைவிட இந்தியர்களின் பணமே சுவிஸ்வங்கிகளில் அதிகமாக பதுக்கபட்டுள்ளது.” என்று அசாஞ்ஜே தெரிவித்துள்ளார் .

Leave a Reply