கடந்த 24ம் தேதி சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது-உடல் இன்று அரசு மரியாதையுடன்-அடக்கம் செய்யபட்டது.

அவரது உடலுக்கு, தேசியக்-கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க ஆந்திர-அரசு மரியாதை தரப்பட்டது . புரோகிதர்கள் மந்திரங்கள்-முழங்க இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஐந்து

நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் சாய்பாபா உடலின் மீது தெளிக்கபட்டது. பசு தானம் தரப்பட்டது . சர்வசமய பிரார்த்தனையும் நடந்தது.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, வெங்கய்ய நாயுடு, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்துகொண்டு சாய்பாபாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்

Leave a Reply