தமிழகத்தில் சமசீர் கல்வியைஅறிமுகப்படுத்தியிருக்கும் அரசு, அதேபோன்று , சமச்சீர் மின்வெட்டையும் அனைத்து இடங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று கொடிசியா வலியுறுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் கொடிசியா அமைப்பின்-தலைவர் தெரிவித்ததாவது , தற்போது நடைமுறையில் இருக்கும்

மின்வெட்டினால், கோவையில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் கடுமையாக உற்பத்தி பாதிக்கபடுகிறது. எனவே நாள் ‌ஒன்றுக்கு ரூ. 700 கோடிக்கு நஷ்டம்ஏற்படுகிறது. மாநிலம்முழுவதும், மின்வெட்டு ஒரேஅளவில் இருக்க வேண்டும், இது பன்னாட்டு-தொழிற்சாலை நிறுவனங்களுகும் பொருந்தவேண்டும். அவ்வாறு இருந்தால், மின்வெட்டின் காலஅளவு குறையும், சென்னையில் இயங்கிவரும் நிறுவனங்கள்-மட்டும் உயர்ந்தது என்ற மனப்பான்மையை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply