இறைவனின் படைப்புகலிலே மிகவும் சிறந்தது மனிதனின் படைப்புதான் , ஆனால் சில மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவமே புரிவதில்லை, அவர்கள் பணம். சொத்து. கௌரவம் இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்,

ஆனால் மனிதன் இறந்த பிறகு அவருடன் பணமோ. சொத்தோ வரப்போவதில்லை, பின்பு என்ன தான் வரப்போகிறது

என்கிறீர்களா? அதிகம் இல்லை ஒன்றே ஒன்று தான், வாழ்ந்த காலத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் செய்த நற்செயல்கள் மட்டும் தான் என்றும் அழியாமல் இருக்கும்,

வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா? அல்லவே அல்ல, வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம் என்பதுதான்,

மாபெரும் வீரனான அலெக்சாண்டர் அவருடைய இறுதி ஊர்வலத்தில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார், அதன்படி அவருடைய சவப்பெட்டியின் முன்பாக மிகச்சிறந்த வீரர்கள்; அதைத் தொடர்ந்து நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும். அழகான ராணிகளும். வலது பக்கத்தில் மதத் தலைவர்கள். இடது பக்கத்தில் வைத்தியர்களும். இறுதி ஊர்வலத்தில் வந்தனர், மாவீரனான அலெக்சாண்டரின் சவப் பெட்டியிலிருந்து அவரது உள்ளங்கைகள். திறந்த நிலையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன,

மாவீரன் அலெக்சாண்டர் எதை எடுத்து சொல்வதற்காக அவ்வாறு ஏற்பாடு செய்ய சொன்னார் என்கிறீர்களா? அவருடைய மரணம் நெருங்கும் போது சிறந்த படைத்தலைவர்களாலோ. அன்பான ராணிகளாலோ சக்தி படைத்த மதத்தலைவர்களாலோ மற்றும் எந்த வைத்தியராலோ அவரை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை, நிறைய செல்வங்கள் இருந்தும் காலியான கைகளுடன் தான் இறுதியில் செல்ல முடியும் என்பதை உணர்த்தத்தான் அவருடைய இறுதி ஊர்வலத்தை இவ்வாறு ஏற்பாடு செய்ய சொன்னார்,

ஆதலால் வாழ்க்கை என்ற தத்துவத்தை உணராதவர்கள் வாழும்போது இருட்டில்தான் தடுமாறிக் கொண்டிருப்பார்கள், அவ்வாறு இல்லாமல் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டு மற்றவர்களை மகிழ்விக்க உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தால் உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்குமேõ

வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

வாழ்க்கையில் முன்னேற, வாழ்க்கை என்பது, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

Leave a Reply