2ஜி விவகாரத்தில் பிரதமர் தனக்கிறுக்கும் பொறுப்புகளை முழுமையாக தட்டிகழித்துவிட்டார்; இது நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் வரைவு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடபட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார் .

செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : 2ஜி ஒதுக்கீடு

விவகாரத்தில் மன்மோகன் சிங் சற்று பொறுப்புடன் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசுக்கு வருவாய் இழப்பு-ஏற்பட்டிருக்காது. அவர் தனது-பொறுப்புகளை உணர்ந்து செயல்பட தவறிவிட்டார். பிரச்னை என வரும்போது எந்தவித-பொறுப்புகளையும் அவர் ஏற்பதில்லை. நமது நாட்டு ஜனநாயக-வரலாற்றில் முன் எப்போதும் இதை போன்று பிரதமர் ஒருவர் நடந்து கொண்டது இல்லை என்று தெரிவித்தார்

Leave a Reply