அருணாசலபிரதேச முதல்-மந்திரி டோர்ஜி காண்டு மற்றும் அவருடைய பாதுகாப்பு-அதிகாரி , உறவுக்காரபெண் லாமு, ஆகியோர் தவாங் என்கிற இடத்திலிருந்து தலைநகர் இடாநகருக்கு ஹெலிகாப்டரில் நேற்று-காலை 9.50மணிக்கு புறப்பட்டனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட 2மணி நேரத்தில் இடாநகரில் தரை-இறங்கி இருக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றடையவில்லை. மேலும் ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கபட்டது.

இதைத்தொடர்ந்து தேடுதல் பணிகள் முடுக்கி விடபட்டுள்ளன. நேற்று இரவிலிருந்து இந்திய விமானபடையை சேர்ந்த இரண்டு விமானங்கள் தேடுதல்-பணியில் ஈடுபட்டுள்ளன. இதை தவிர, தரைவழியாக ராணுவம் ஹெலிகாப்டரை தேடி வருகின்றது.

அருணாசலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, ராணுவத்தின் உளவுப்பிரிவில் பணியாற்றியவர். கடந்த 2007-ம் ஆண்டில் அருணாசல பிரதேச முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

{qtube vid:=64jKCvV0MrU}

Leave a Reply