ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்படுவதை வீடியோ மூலமாக நேரடியாக பார்த்துள்ளார் பராக் ஒபாமா. மேலும் அவருடன் சேர்ந்து ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத்தலைவர்கள் இந்தக்காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் இருக்கும் நெருக்கடி காலஅறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக்காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டுவீழ்த்திய வீரர்களில் ஒருவரது-ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த காமரா மூலமாக இந்தக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகியுள்ளது அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது-கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத்தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு-சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதைதொடர்ந்து அந்த-வீரர் மீண்டும் ஒசாமாவின் இடதுபுற-நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி-செய்துள்ளார்.

Tags:

Leave a Reply