ஆந்திரவின் முன்னால் முதல்வர் மறைந்த என்டி. ராமராவின்-பேரன் ஜூனியர் என்.டி.ஆர். சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகளான லட்சுமி பிரணதிக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது .

கடந்த ஒருமாதமாக காலமாகவே திருமண ஏற்பாடுகள் மிகுந்த பொருள் செலவில் நடைபெற்று வருகிறது . ஐதராபாத் அருகே

இருக்கும் மாதாபூரில் திருமண பந்தல் போடபட்டுள்ளது. ரூ.6 கோடி மதிப்பில் பிரத்யேகமாக திருமண-மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பந்தலை சுற்றி அலங்கார வேலைபாடுகளுடன் நீர்வீழ்ச்சிகள், சிலைகள், அரண்மனை-வாயில்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது, 55 வகையான உணவுடன் விருந்து பரிமாறப்படுகிறது, திருமண செலவு 20 கோடியை தாண்டும் என எதிர்பர்க்கபடுகிறது .

இன்று இரவு 7மணி முதல் திருமணநிகழச்சிகள் துவங்குகின்றன. விடியவிடிய விருந்து நடைபெற உள்ளது. ரசிகர்கள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட 17ஆயிரம் பேர் திருமணத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply