கைத்தொலைபேசி, லெப்ரொப் தேவைகளுக்கு மின்சக்தி தேவைப்படுகிறதா? இனிமேல் அதைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். அவற்றிற்கு தேவைப்படும் மின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாமென கனடாவிலுள்ள Simon Praser பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Nax Donelen என்பவரும் அவருடைய சகாக்களும் கண்டுபிடித்துள்ளனர்.

5வாட்ஸ் மின்சக்தியைப்பெற கால்களில் இரண்டு இடுக்கிளை

(Brece)பொருத்த வேண்டியுள்ளது. இதற்கு நீங்கள் சம்மதம் என்றால், மேற்கொண்டு விபரங்களைப்படியுங்கள்.

இரண்டு கால்களில் பொருத்தப்படும் இடுக்கிகள் தற்சமயம் 1.6 கிலோ எடையுள்ளதாகும்.இவ்விடுக்கிகள் முழங்காலுக்கு மேற்புறத்தையும், கீழ்புறத்தையும் இணைக்கும் ஒருவகைப் பிடிப்பு. கால்கள் நடக்க நடக்க உந்தப்படும் விசையினால் இவ்வகைமின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் 7 வாட்ஸ் மின்சக்தி உங்கள் முதுகுப் புறத்தில் தொங்க விடப்படும் ஒருவித பையிலான உறைக்குள் சேகரிக்கப்படும். இதன் எடை கிட்டத்தட்ட 38கிலோ எடையாக இருக்கக்கூடுமென

ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டால், இதன் எடை குறைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டென நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கால்களில் பொருத்தப்படும் இடுக்கிகள், இருப்பது போன்ற பிரமையை இல்லா தொழித்தலே மேற்கொண்டு ஆராயப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முதலில் இராணுவத்தினர் அவசர உதவியாளர்கள் பாவிக்கக் கூடிய வகையில், இவ்விடுக்கிகள் தயார் செய்யப்படுமென்றும், அதன் அனுபவத்தை அனுமானித்து மேற்கொண்டு முன்னேற்றம் செய்ய உத்தேசித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சுமக்க முடியாத சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு அன்றாடம் ஊசலாடும் மக்களுக்கு இதுவேறு சுமையா என்று முணுமுணுப்பது காதில் கேட்கிறது. தினமும் நடக்கத்தான் செய்கிறீர்கள், சும்மா வரும் ஒரு சேகரிப்பை, காலில் பொருத்திக்கொண்டும், முதுகில் சுமந்துக்கொண்டும் போவதில் குறையேதும் இல்லையே.

Leave a Reply

Your email address will not be published.