பாபா ராம்தேவ்வை தில்லி போலீசார் வலுகட்டாயமாக வெளியேற்றியது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும் என குடியரசுத்தலைவரை பாரதிய ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தலைமையில் கட்சித்தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண்குமார், எஸ் எஸ் அலுவாலியா போன்ற தலைவர்கள் திங்கள்கிழமை மதியம் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Leave a Reply