சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியாவின் கறுப்பு பணத்தில் பாதி காங்கிரஸ்கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுகும் மற்றும் அந்த கட்சியின் ஆதரவாளர்களுகும் சொந்தமானது என்று பாரதிய ஜனதா எம்பி மேனகா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது காங்கிரஸ் சிபிஐயை அதன் லாக்கரில் வைத் திருக்கிறது தேவைப்படும்-போது சிபிஐயை பயன்படுத்துகிறது. பாபா ராம்தேவ் மற்றும்– அண்ணா ஹசாரேவிடம் காங்கிரஸ் நடந்து கொள்ளும் முறை கெளரவமானதாக-தெரியவில்லை என அவர் கண்டனம்-தெரிவித்தார்.

காங்கிரஸ்-தலைவர்களின் பணம் சுவிஸ்-வங்கிகளில் வைக்கபட்டுள்ளது. எனவேதான் கறுப்புப்பணத்துக்கு எதிராக குரல்-எழும்போதெல்லாம் அதை நசுக்க முயற்சிக்கிறது என்றார் அவர்.

Tags:

Leave a Reply