அ.தி.மு.க அரசை மூன்று மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டோம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ; சமசீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.

புதிதாகப்பொறுப்பேற்ற அதிமுக அரசை மூன்று மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டோம். பேரவையில் பாரதிய ஜனதாவுக்கு பிரதிநிதிகள் இல்லை என்றாலும் மக்கள் மன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார்.

Leave a Reply