தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா-கல்லூரியில் இடம்கேட்டு தேமுதிகவினர் மிரட்டியதாக காவல் துறையிடம் புகார் தரப்பட்டுள்ளது . இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் பிரபாகரன், +2 தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக தெரிகிறது, மேலும் அவர் சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியில் பிஎஸ்சி., விசுவல் கம்யூனிகேசன் பட்டயபடிப்புக்கு விண்ணப்பித்துள்ளார் . குறைவான மதிப்பெண் காரணமாக , விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது . இதையடுத்து கல்லூரி முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது .

Tags; லயோலா கல்லூரியில், லயோலா கல்லூரி, தேமுதிக தலைவர், விஜயகாந்த்தின் , விஜயகாந்,

Leave a Reply