தான் செயல்படாத பிரதமர் அல்ல என்று மன்மோகன் சிங் கூறிக் கொள்ளத் தேவையில்லை. அவர் செயல்படவில்லை என்பதுதான் இந்தியாவுக்கே தெரிந்துள்ளதே என்று பிகார் துணை முதல்வர் சுஷில் மோடி குற்றம் சாட்டினார்.

தில்லியில் புதன்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், தான் செயல்படாத பிரதமர் என்று கூறுவதை மறுத்ததோடு, தினசரி 18

மணி நேரம் உழைப்பதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து வியாழக்கிழமை கருத்து தெரிவித்த சுஷில் மோடி, இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர் மன்மோகன் சிங்தான். அவர் செயல்படாத பிரதமர் இல்லை என்றால் அதுகுறித்து பத்திரிகை ஆசிரியர்கள் மத்தியில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

Tags:

Leave a Reply