கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கபட்டபோது மத்திய நிதிமந்திரியாக பதவி வகித்தவர், ப.சிதம்பரம். இதில் ஏலமுறை கடைப்பிடிக்காததால் அரசுக்கு ரூ.1லட்சத்து 76ஆயிரம் கோடி நஷ்ட்டம் உருவானதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நஷ்டத்திற்கு அப்போதைய நிதிமந்திரி ப.சிதம்பரமும் பொறுப்பு ஆவார்.

2008 ஜனவரி 9ந்தேதி நிதித்துறையின் கூடுதல்-செயலாளர், ஏலமுறையில்தான் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என தெளிவாக பரிந்துரை செய்துதுள்ளார் . ஜனவரி 15ல் நிதிமந்திரி பிரதமருக்கு ஒரு குறிப்பு எழுதுகிறார். அதில் வருங்காலத்தில்-ஸ்பெக்ட்ரம்

ஒதுக்கீட்டிற்கு ஏலமுறையை பின்பற்றுவதாகவும், கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள்-அனைத்தும் முடிந்துபோன ஒரு விவகாரங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

எனவே பிரதமர் மன்மோகன்-சிங், இந்த விஷயத்தில் தனது மவுனத்தை கலைதுவிட்டு விளக்கம் தற வேண்டும். மேலும் ப.சிதம்பரம் மந்திரிசபையில் தொடர்ந்து-நீடிப்பதை ஏற்கமுடியாது. அவரை உடனடியாக பதவி-நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க வின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply