இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் அடுத்த மாதம் பாரதிய ஜனதா சார்பாக , கடல் முற்றுகை-போராட்டம் நடத்தப்படும் என்று மாநில-தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது வேதனை தருகிறது . மீன்பிடிக்க

செல்லும் நமது-மீனவர்கள் உயிருடன் திரும்புவது கேள்விக்குறியாகி உள்ளது. இதை தடுக்க-வேண்டிய மத்திய மற்றும் மாநில அரசுகள் தனது கடமையிலிருந்து தவறுகின்றன. எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

வரும் ஆகஸ்ட் 7ம் தேதி, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை-கண்டித்து, கடல் முற்றுகை போராட்டத்தை ராமேஸ்வரத்தில் நடத்துவோம். அப்போதும் நடவடிக்கை-இல்லை எனில் , கச்சத்தீவை மீட்கக்கோரி அங்கு தேசியக் கொடியை ஏற்றுவோம் என்றார்.

TAGS; பாரதிய ஜனதா வின்,  கடல் முற்றுகை  போராட்டம்,  பொன்  ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா,  மீனவர்கள், இலங்கை கடற்படையினரால்,

Leave a Reply