ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது 2ஜி ஊழலில் அவரின் பங்கு என்ன என மனதில்கேள்வி எழுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மும்பையில் மக்கள் கூடும் வணிகப்பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து உள்ளது. மத்திய உளவு துறை இது குறித்து எச்சரிக்கை

விடுக்கவில்லையா? பாதுகாப்புத துறை தயார்நிலையில் இல்லையா? போன்ற_கேள்விகள் மனதில் எழுகின்றன.

பயங்கரவாதத்தை கட்டுபடுத்துவதிலும், எதிர்ப்பதிலும் மத்திய உள்துறை அமைச்சரின் செயல்பாடு திருப்திகரமாக\ இல்லை. நடைபெறும் சம்பவங்கள் உள்நாட்டுப்பாதுகாப்பை கேள்வி குள்ளாக்கியுள்ளன.

மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது அலைக்கற்றை ஊழலில்_சிதம்பரத்தின் பங்கு என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் சொல்லில் காட்டும்_தீவிரத்தை, செயலில் காட்டவில்லை. எனவே, அவர் பதவிவிலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply