பா ஜ க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது .

தமிழக அரசு சமச்சீர் கல்வியை திருத்தங்களுடன் அமல்படுத்த_வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்தில் நாத்திககருத்துகள் இருக்கிறது . இந்துமதத்தை அவமதிக்கும் பகுதிகளை நீக்கிவிட வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விரைவில் 3வது குற்றபத்திரிகை_தாக்கல் செய்யப்பட இருக்கிறது . இதில் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் பெயரும் இடம்பெறலாம் என தெரிகிறது . இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகிற பாராளுமன்றகூட்ட தொடரில் இந்துமக்களை பாதிக்கும் வகையில் சட்டவரைவு மசோதா தாக்கல் செய்யபட உள்ளது. ஆரம்பநிலையிலேயே இதை பா.ஜ க எதிர்த்து போராடும்” என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply