டக்ளஸும், கருணாவும் அமைச்சர்கள் கிடையாது . அவர்கள் ராஜபட்சவின் சேவகர்கள் என்று ஐக்கிய சோசலிஸக்கட்சியின் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார் .

அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . யுத்தம் முடிந்த பிறகும் வடபகுதியில் வசிக்கும் மக்கள் சுதந்திரத்தையும், ஜனநாயகதையும்

இழந்துள்ளனர்.அதிகாரத்தை பகிர்ந்தளித்து தேசியப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முன்வரவில்லை .

வடபகுதியில் ராணுவ ஆட்சியே நடைபெறுகிறது . சகல விஷயத்திலும் ராணுவத்தலையீடுகள் அதிகரித்துள்ளது . இதே நிலைதான் தென் இலங்கையிலும் படிப்படியாக வருகிறது.

வடக்குமக்கள் திறந்தவெளி சிறை சாலையில் வாழ்வதை போன்று ராணுவ அடக்கு_முறையில் அகபட்டுள்ளனர்.வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தம் தொடர்பான போர்க்குற்ற அறிக்கை மற்றும் சேனல் 4வீடியோ ஆகியவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply