வேதியியல் பாடத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டியவர் தான் மரியா ஜுயஸ்.
எகிப்தில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கிரேக்கராக இருந்திருக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கின்றனர்.

மரியா தனது கண்டுபிடிப்புகளை மரியா பிராக்டிகா என்ற நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார். செய்முறைக்கு

அதிகளவில் முக்கியத்துவம் அளித்தார். சோதனைகள் மூலம் நேரடியாக பார்க்கும் உண்மைகளை பதிவு செய்தார். சித்தாந்தங்கள் விதிகள் என எழுத்துக் கோட்பாடுகளில் இறங்கி விடவில்லை.

உலோகங்கள் தனிமங்களா என்றும், அவற்றின் உருகுநிலைத்தன்மை பற்றியும் ஆராய்ந்துள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட தனிமங்களை பட்டியல் இட்டுள்ளார்.

வேதியியலின் அடிப்படை, தனிமங்கள் மற்றும் அவற்றின் பண்புகள் சார்ந்ததே. மரியா தனிமங்களின் கலவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இரண்டு வெவ்வேறான உலோகங்கள் இணைந்து உண்டாகும் கலவை அவ்விரு தனிமங்களின் பண்புகளோடு மட்டும் அல்லாமல் புதிய சிறப்புப் பண்புகளையும் பெறுகிறது என்பதை மரியா கண்டுபிடித்தார்.

இவரது சோதனைகளில் தங்கத்தை ஓர் அணிகலனாக மாற்றியதுதான் பெருமை வாய்ந்தது. தங்கம் காரட்டுகளில் அளக்கப்பட வேண்டும் என்று புதிய அளவை முறையை ஏற்படுத்தியது மரியாதான். 24 காரட் தங்கத்தில் தாமிரம் போன்ற மற்றொரு தனிமத்தைச் சரியான விகிதத்தில் கலந்தால் மட்டுமே நாம் நினைக்கும் அணிகலனாக தங்கத்தை வளைக்க முடியும். இதைக் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டிய பெருமை இவரையேச் சேரும். தனிம வேதிவினைகள் நிகழ பல கருவிகளைக் கண்டறிந்தார். கருவி இயலிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது ‘கெர்டோ டாக்கிஸ்’ என்ற கருவி. தனிமங்களை உயர் வெப்ப நிலைக்கு உட்படுத்துவதே தனிம இயலின் முக்கியமான விஷயமாகும். இதுபோன்ற உயர் வெப்ப நிலைகளை எட்ட கொதிகலன்கள் தேவை. கெர்டோடாக்கிஸ் என்பது பாதரசம், சல்பர், காரீயம் போன்றவற்றை உயர் கொதிநிலைக்கு உட்படுத்தி, அந்த வெப்பத்தில் தாமிரத்தை உருக்கும் புதிய யுக்தியைக் கொண்ட கருவி. சல்பரின் ஆவி நிலை தங்கம் போல பளபளப்பாக காட்சியளித்தது. அதைக்கண்ட மரியா, அதிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க முயன்று பிறகு அது தவறு என்பதையும் கண்டுகொண்டார். ஆனால், தங்கம் கிடைக்காமல் போனாலும், வெள்ளி சல்பைடு என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இது உலோக வேலைகளில் ‘நைலோ’ என்ற பெயரில் துரு ஏறாமல் இருக்க சேர்க்கப்பட்டு வருகிறது.

இரட்டை நீராவி கொதிகலன் மரியாவின் மற்றொரு உன்னதமான கண்டுபிடிப்பு. இதுதான் உலகின் முதல் வெப்ப சமநிலையைப் பாதுகாக்கும் கலன் அதாவது, பிளாஸ்க். இப்போதும் கூட பிரான்சில் பிளாஸ்க்கின் பெயர் ‘மரியாவின் தொட்டி’ என்றே அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.