தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டிக்கபட வேண்டும். அதேநேரத்தில் அப்பாவிகள் யாரும் பாதிக்கபட கூடாது என்பதே பாரதிய ஜனதாவின் நிலைபாடு என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார் .
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய
பொன்.ராதாகிருஷ்ணன், தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டிக்கபட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுகருத்துகள் இல்லை. ஆனால், அதே நேரம் அப்பாவிகள் பாதிக்கப்பட கூடாது என்பதே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு.
நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அப்சல்குருவின் மரணதண்டனையை ஆதரித்து தமிழகசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை பாரதிய ஜனதா வரவேற்கும். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நிறை வேற்றாமல் இருக்கும் அப்சல்குருவின் மரணதண்டனையை மத்திய அரசு உடனே நிறை வேற்ற வேண்டும்.
ஊழலை ஒழிக்க அயல்நாட்டில் பதுக்கிவைதிருக்கும் கருப்புபணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா, பல ஆண்டுகளாக போராடி_வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அன்னா ஹசாரேவின் போராட்டம் அமைந்து உள்ளது.
பிரதமர் நீதிதுறை உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்கும் வகையில் வலுவானலோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்றார்.